Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

சனி, 9 டிசம்பர், 2017

சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி- கல்வி அமைச்சு

‘தாய் நாட்டுப் பிள்ளைகளை எப்போதும் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் தேசிய மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திசம்பர் 07 ம் திகதி தேசிய சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி நாள் என்று பெயரிடப்பட்டது.  சுரக்‌ஷா மாணவர் காப்புறுதியானது, பிள்ளைகளை உடல் மற்றும் உள நலமுள்ளவர்களாக பாதுகாப்பதற்கும், அதன் ஊடாக தாய் நாட்டின்
பிள்ளைகளுக்கு மிகவும் நல்ல எதிர்காலத்தை வழங்குவதற்கும் நல்ல வலுவைக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும். இந்த வேலைத் திட்டம் மற்றும் அதன் பயனை அடையக் கூடிய விதம் தொடர்பில் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் உட்பட பாடசாலை சமூகத்தினருக்கு விளக்கும் தேவை மேலும் எழுந்திருப்பதால் அதன் பொருட்டு திசம்பர் 07 ம் திகதி சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி தொடர்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை அடிப்படையிலான சமூகத்துக்கு விளக்கும் பொருட்டு தீவு தழுவிய இந்த விசேட வேலைத் திட்டம் கல்வி அமைச்சினால் செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் கீழ் செயற்பட ஆரம்பித்துள்ள சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி வேலைத் திட்டம் அக்டோபர் மாதம் முதலாம் திகதியான உலக சிறுவர் தினம் தொடக்கம் இடம்பெற்று வருகின்றது. இதன் கீழ் ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் ஆண்டென்றுக்கு ரூபா 2 இலட்சப்படி காப்புறுதிக்குக் கிடைக்கின்றது. அரசாங்கம் சகல பாடசாலைகள், உதவி நன்கொடை பெறும் தனியார் பாடசாலைகள், தேசிய பாடசாலைகள், மற்றும் பிரிவேனாக்கள் உட்பட 11,242 பாடசாலைகளில் கல்வி பயிலும், பாடசாலை செல்லும் வயதையடைந்த 45 இலட்சம் பிள்ளைகள் உள்ளடக்கப்படுவார்கள்.

இதன் பயன்கள் இலங்கை காப்புறுதியின் (Srilanka insurance)  ஊடாகக் கிடைக்கும்.
அதன் பொருட்டு வழங்கப்படும் சகல செலுத்துகைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும். பிள்ளைகளின் பெற்றோர் இது தொடர்பில் எந்த செலுத்துகையும் செய்யவேண்டியதில்லை.

இதற்காக கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ள தொகை ரூபா 3 பில்லியனாகும்.
சுரக்‌ஷா மாணவர் காப்புறுதியின் கீழ் பாடசாலை பிள்ளையொன்றின்
✳வெளி மருத்துவ சிகிச்சைக்காக ரூபா 10,000/- மும்

✳மருத்துவ மனையில் தங்கி மருத்துவம் செய்துகொள்ளும் போது ரூபா 100,000/= மும்

✳தாய் அல்லது தந்தையின் திடீர் மரணத்திற்கு ரூபா 75,000/- மும் காப்புறுதி பணமாக்கக் கிடைக்கும்.

✳அவ்வாறே பிள்ளை முழு வலுவிழந்த நிலைமையை அடைந்தால் ரூபா 100,000/- மும்

✳ பகுதியளவு வலுவிழந்தால் ரூபா 50,000/- முதல் ரூபா 100,000/- வரை

என்று பலவித காப்புறுதிப் பயன்கள் கிடைக்கின்றது. இதுவரை பெருந் தொகையான மாணவ மாணவிகள் சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி பயனைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி அமைச்சு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக