Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

திங்கள், 11 டிசம்பர், 2017

கல்வித்துறையின் இன்றைய நிலை


சைற்றம் பிரச்சினையை மையப்படுத்தி இன்று எமது நாட்டில் இலவச கல்வியின் எதிர்காலம் குறித்துப் பல விவாதங்கள் அரங்கேறியுள்ளன.
உண்மையில் நாம் அனைவருக்கும் பழக்கமான ‘இலவச கல்வி’ என்னும் சொல் நாம் யாரிடமிருந்தும் எந்தவொரு
செலவும் செய்யப்படாத கல்வி என்பதா? இல்லை இக்கல்வியை வழங்க பொது மக்களின் பணம் கோடிக்கணக்கில் செலவாகின்றது. ஆகவே அதனை ‘பொதுமக்களின் கல்வி’ ‘பிரஜைகளின கல்வி’ என அழைப்பது மிகப் பொருத்தமாக அமையும் என்பது எனது கருத்தாகும். எவ்வாறாயின் தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்து கற்கும் கல்வி தனியார் கல்வி என்றும் பொது மக்களின் பணத்திலிருந்து பெறும் கல்வி இலவசக் கல்வி எனவும் கருதப்படுகின்றது.

சைற்றம் பிரச்சினைக்கு எதிராக பல மாதங்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள். நடை பவனிகள் சாகும் வரை உண்ணாவிரதம், எதிர்ப்புப் பதாகைகள் மற்றும் எழுப்பிய கோஷங்கள் அனைத்திலும் ‘இது இலவச கல்வியின் மரண ஊர்வலம்’ இலவச கல்வியை உயிருள்ளவரை பாதுகாப்போம்’ ‘இலவச கல்வியை அழிப்பவரகள் மீது இடி விழ’ ஏழை மக்களின் உரிமையான இலவசக் கல்வியில் கை வைக்காதே என்னும் வாசகங்களே காணப்பட்டன.
பாடசாலை கல்வியை நிறைவு​ெசய்துவிட்டு உயர் கல்விக்கான பல்கலைக்கழக அனுமதியைப் பெற நடைபெறும் கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சைக்குத் தோற்ற தனியார் கல்வி எவ்வளவு தூரம் பங்களிப்பை வழங்குகின்றது என்பது அனைவரும் அறிந்ததே.
பாடசாலைகளில் இறுதி இரண்டு தவணைகளிலும் வருகை மிகக் குறைவாகவே காணப்படும. அந்நாட்களில் அநேகமான மாணவர்களை தனியார் வகுப்புகளில் காணமுடியும். இங்கு அவர்கள் தம்மிடமுள்ள பணத்துக்கு ஏற்ப சாதாரண அல்லது உயர்ரகமான தனியார் வகுப்புகளை தெரிவு செய்வார்கள். பணக்கார பெற்றோர்கள் ஒரு பாடத்திற்கு மணித்தியாலத்துக்கு 5,000/= தொடக்கம் 10,000/= வரை செலவு செய்து பிரபல்யமான ஆசிரியர்களை தங்களது வீட்டிற்கே அழைத்து வந்து கற்பிப்பார்கள்.

இதன்படி இப்பரீட்சையில் இலங்கைப் பெற்றோர்களின் பிள்ளைகளிடையே பணக்காரப் பிள்ளைகளுக்கும் ஏழை பிள்ளைகளுக்கும் சமமான கல்வி கற்க சந்தர்ப்பம் கிடைக்கின்றதா? இலவச கல்வியின் தந்தையெனப் போற்றப்படும் சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர எதிர்பார்த்த நியாயமான கல்வி அனைவருக்கும் கிடைக்கின்றதா?
மேலும் இலவச கல்வி சேவையின் அழிவுக்கு ஆரம்பம் SAITAM, ACBT,NIBM LYCEMUNO போன்ற பாரிய தனியார் கல்வித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ரியூசன் வகுப்புகள் மூலமே ஆரம்பிக்கப்பட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இன்று இலவச கல்வியை காப்பாற்றவென முன்னின்று போராடும் மாணவர்கள் அனைவரும் தனியார் கல்வியை பெற்றுதான் பல்கலைக்கழகம் சென்றிருப்பார்கள் என்று எண்ணுகின்றேன். அதில் தவறில்லை. ஆனால் இதிலுள்ள தவறு என்னவென்றால் மாணவர்கள் சரியாக விடயங்களைப் புரிந்துகொள்ளாது தனியார் கல்வி நிறுவனங்களை முற்றாக இரத்துச் செய்யவேண்டும் என கூறுவதாகும். பெற்றோர்களும் தமது பிள்ளைகள் தனியார் வகுப்புகளுக்கும் செல்லாமல் சித்தி அடைந்தவர்களை என மனச்சாட்சியைக் கேட்க வேண்டும்.

இந்நாட்டில் இருக்கவேண்டியது முற்று முழுதாக மக்களின் நிதி மூலம் செயல்படும். இலவச கல்வி மட்டுமா? அப்படியானால் பணம் செலவு செய்து கல்வி கற்க தனியார் வகுப்புகளையும் தடை செய்ய வேண்டுமா? தேவையென்றால் உலகின் ஏனைய நாடுகளில் உள்ளது போன்று இலவச கல்விக்கும், தனியார் கல்விக்கும் ஜனநாயக ரீதியில் இடங்கொடுக்க வேண்டுமா என்பதனை நாம் முடிவு செய்ய வேண்டும்.
இவ் இரண்டு பிரிவிலும் வழங்கப்படும் கல்வி உயர்தரத்தில் வழங்கப்படுவது அவசியமாகும். நிபந்தனை பொதுவாக எல்லா கல்வித் துறையிலும் விதிக்கப்பட வேண்டும். அதற்கென பொறுப்பை அரசே ஏற்க வேண்டும்.
பேராசிரியர்
எஸ்.ஏ. குலசூரிய
(06.12.2017 தினகரன் பத்திரிகையில்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக