Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

செவ்வாய், 5 டிசம்பர், 2017

வானிலை முன்னறிவிப்பு - இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் (05.12.2017)


06ம் திகதி மார்கழி மாதம் 2017 கான வானிலை அறிக்கை.
(05ம் திகதி மார்கழி மாதம் 2017 நண்பகல் 1200 மணிக்கு வழங்கப்பட்டது.)


நாட்டிற்கு 950km தொலைவில் வங்காள விரிகுடாவின் தென்கீழ் திசை கடற்பகுதியில் தாழ் அமுக்கப்பிரதேசம் அடுத்த 24 மணி நேரத்தில் தாழ் அமுக்கமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக இன்றில் இருந்து சில நாட்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் விசேடமாக வடக்கு, கிழக்குகடற் பிராந்திங்களில்
காற்றின் வேகம் அதிகரித்து காணப்படக்கூடும்.
நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ காணப்படக்குடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில்
மாலை 2.00 மணிக்கு பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ஏற்படலாம்.
கிழக்கு, வடக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில்ஓரளவு கனமழை (அதாவது 75mm க்கு மேல் ) காணப்படக்கூடும்.
வடக்கு, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஓரளவு பலத்த காற்று (அண்ணளவாக மணித்தியாலத்துக்கு 50km வரையில்)வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்தகாற்று வீசக்கூடும். 
மின்னலினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காக பொதுமக்கள் முன்எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் (05.12.2017)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக