Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள்


தற்போதைய சூழலில் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதற்கு அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடு இருக்கும்.

ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை
பழக்கமாக கொள்ள வேண்டும்.

இருப்பினும் எரிச்சலுடன் இருந்தால், சிறுநீர் பாதையில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

அன்னாசிபழம் மற்றும் முள்ளங்கி சம அளவு சாறு எடுத்து, இரண்டும் கலந்து பருகி வந்தால் சிறுநீர்பாதையில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.

சிறுநீர் பாதையினால் ஏற்படும் எரிச்சலை, இந்த சிட்ரஸ் பழத்தின் ஜூஸானது சரிசெய்யும். வேண்டுமெனில் எலுமிச்சை ஜூஸ் கூட குடிக்கலாம். ஏனெனில் சிட்ரஸ் பழ ஜூஸ்கள், பாக்டீரியாவை அழிக்கவல்லது.


நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம். சொல்லப்போனால், நெல்லிக்காய் பெரும்பாலான ஆயுர்வேத மருந்துவத்தில் நோயை குணமாக்கப் பயன்படுகிறது.

தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இவற்றை மயக்க நிலை மற்றும் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.

ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால், சரியாகிவிடும்.

எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும், இதனால் பாக்டீரியாவானது தங்காமல் தடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக