Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

சனி, 2 டிசம்பர், 2017

இணைய பாதுகாப்பு ; இலங்கைக்கு 72 ஆவது இடம்


ஐக்கிய நாடுகள் சபையின் தொலைத்தொடர்பு அமைப்பானது இவ்ஆண்டுக்கான உலகலாவிய இணைய பாதுகாப்பு தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், முதலாம் இடத்தை சிங்கப்பூர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஆறு பிராந்தியங்களைச் சேர்ந்த நாடுகள் உட்படுத்தப்பட்டுள்ளன. 
ஆபிரிக்க பிராந்திய நாடுகள், அமெரிக்க பிராந்திய நாடுகள், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை சேர்ந்த
நாடுகள், பொதுநலவாய நாடுகள், பசுபிக்வலய மற்றும் ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என்பன தரப்படுத்தல்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இத்தரப்படுத்தல் அட்டவணையில் 165 நாடுகள் இடம்பிடித்துள்ளதுடன், முதல் ஐந்து இடங்களுக்குள் சிஙகப்பூர், ஐக்கிய அமெரிக்கா, மலேசியா, ஓமான் மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் சிங்கப்பூர் 0.925 புள்ளிகளையும் அமெரிக்கா 0.919 புள்ளிகளையும் மலேசியா 0.893 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
இவ் உலகலாவிய இணைய பாதுகாப்பு தரப்படுத்தலானது தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் திறன்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களின் ஒத்துழைப்பினை அடிப்படையாகக் கொண்டே ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. 
மேலும் இதன் முதல் ஆய்வானது 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
அண்மை நாடன இந்தியா 0.683 புள்ளிகளுடன் 23 ஆம் இடத்தைப்பெற்றுள்ளதோடு பங்களாதேஷ்,பாகிஸ்தான், இந்தோனேசியா, லாவோஸ், கம்போடியா, நேபாளம் மற்றும் புருனே போன்ற நாடுகளும் இப்பட்டியலில் உள்ளவாங்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.

Virakesary.lk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக