Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

செவ்வாய், 23 ஜனவரி, 2018

நாய்களின் குரலொலியை இனி மொழிபெயர்த்து புரிந்துகொள்ளலாம்.


மனித இனத்துடன் இணக்கமாக ஒன்றி வாழும் செல்லப்பிராணிகளாய் நாய்கள் உள்ளன.

இந்நிலையில், நாய்களுடன் மக்கள் சரியாக தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள புதிய வழிமுறையொன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வழிமுறை மூலம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விலங்குகளின் குரலொலி மற்றும் முக பாவனைகளை எளிமையாக ஆங்கிலத்தில் மாற்றம் செய்ய முடியும்.

வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கான் லெபோட்சிகோஃப் என்பவர் நாய்களின் உடல் மொழி மற்றும் அவை தகவல் பரிமாற்றம் செய்யும் வழிமுறைகள் குறித்து 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆய்வு செய்து வருகிறார்.

தனது ஆய்வு மட்டுமின்றி பல்வேறு இதர ஆய்வாளர்களின் தகவல்களைக் கொண்டு Pet Translator (விலங்கு மொழிமாற்றம்) எனும் சாதனத்தைக் கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கி வருகின்றார்.

அத்துடன் நாய்கள் குரைத்தல், உறுமல் மற்றும் ஊளையிடல் மூலம் வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை செயற்கை நுண்ணறிவினால் கண்டறிய முடிகிறது.

Machine Learning மூலம் கம்ப்யூட்டர்கள் உதவியுடன் நாய்களின் உறுமல் மற்றும் வால் அசைவுகளால் அவை வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை புரிந்துகொள்ள முடியும் என லெபோட்சிகோஃப் தெரிவித்துள்ளார்.

இன்னும் 10 ஆண்டுகளில் நாய்கள் வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை மனிதர்களால் மிக எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

தற்சமயம் லெபோட்சிகோஃப் மற்றும் அவரது குழுவினர் இணைந்து கண்டறிந்திருக்கும் புதிய வழிமுறையானது நாய்களின் மொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்.

இவ்வாறான தொழில்நுட்ப சாதனங்கள் விலங்குகள் வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை மிக எளிமையாக மனிதர்கள் புரிந்துகொள்ள வழி செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக