அக்ரஹார காப்பீட்டு திட்டம்
|

அக்ரஹார காப்பீடு திட்டம் பொது நிர்வாக அமைச்சினால் ஜனவரி 2006 இல் இருந்து NITF இன் கீழ் இத்திட்டம் செயல்ப் படுகிறது. ஆரம்ப காலம் பெற்ற பல காப்பீட்டு தொகை கோரிக்கைகள் எம்மிடம் இருந்தன. தற்போது நிலுவைகள் அழிக்கப்பட்டு சுமுகமாக நிறுவனம் இயங்குகிறது. இந்த அக்ரஹார மருத்துவ காப்பீடு திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆனது பொது சேவை மாகாண அரச சேவை மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை
உயர்த்துவதற்காகும். அதனால் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள அனைத்து காப்பீட்டு தொகை கோரிக்கைகளையும் துரிதமாக செயற்ப் படுத்த நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டுள்ளது.
காப்பீட்டு கோரிக்கை தொகைகளை துரிதமாக செயற்ப் படுத்த ஒரு புதிய அமைப்பு செயற்ப் படுத்தப்பட்டுள்ளது. தேவையான அனைத்து தரவுகளையும் உள்ளிட்டு ஒரு காப்பீட்டு கோரிக்கை கிடைக்கப் பெற்றால், அந்த தொகையை வழங்க உடனடி ஆயத்தங்கள் மேற்க் கொள்ளப்படும்.
யாருக்கு:
NITF ஆனது ஏழு இலட்சம் பொது ஊழியர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு தனது சேவையை வழங்குகிறது. நாங்கள் அனைத்து மருத்துவ (மருத்துவமனை அனுமதி, பிரசவம், அறுவை சிகிச்சைகள், பைபாஸ் அறுவை சிகிச்சை, கண்ணாடிகள் மற்றும் பல), விபத்துக்கள் மற்றும் இறப்புகளுக்கு கிடைக்கப் பெற்ற காப்பீட்டு கோரிக்கையின் படி கட்டணம் செலுத்துகிறோம்.
பயனாளிகள் :
திருமணமான ஊழியர்கள்- உறுப்பினர், வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகள்( 21 வயதிற்கு உட்ப்பட்ட வர்களாகவும், வேலை வாய்ப்பு அற்றவர்களாகவும், திருமணம் ஆகாதவர்களாகவும் இருக்க வேண்டும்)
திருமணமாகாத ஊழியர்கள்: உறுப்பினர், பெற்றோர்(70 வயதிற்குட்ப் பட்டவர்கள்)
|
உங்கள் உறுப்புரிமையைப் பார்வையிட (to Check your claim) கீழுள்ள இணைப்பிற்கு சென்று உங்கள் தே.அ.அ. இலக்கத்தை உள்ளிட்டு Submit செய்யுங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக