Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

திங்கள், 8 ஜனவரி, 2018

2018 புத்தாண்டில் புறப்பட்ட விமானம் 2017 இல் தரையிறங்கிய சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


2018 புத்தாண்டு தினத்தில் புறப்பட்ட ஹவாயியன் விமானம், 2017 இல் தரை இறங்கியமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உலகில் உள்ள கண்டங்களுக்கு இடையேயான நேர வேறுபாட்டால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உலகிலேயே நியூசிலாந்து நாட்டில் தான் புத்தாண்டு முதலில் பிறக்கிறது. அந்த வகையில், நியூசிலாந்தில் 2018 ஆம் ஆண்டு பிறந்தவுடன், அங்குள்ள ஆக்லாந்து நகரில் இருந்து
ஹவாயியன் எயார்லைன் 446 என்ற விமானம் கிளம்பியது. அங்கிருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள ஹோனோலுலு நகரில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி 10.15 மணிக்குத் தரையிறங்கியது.
முன்னதாக டிசம்பர் 31 ஆம் திகதி 11.55 மணிக்கு விமானம் ஆக்லாந்தில் இருந்து கிளம்புவதாக இருந்தது. ஆனால் 10 நிமிட தாமதம் காரணமாக புத்தாண்டு நள்ளிரவு 12.05 மணிக்குக் கிளம்பியுள்ளது. அங்கிருந்து 9 மணி நேரப் பயணம் செய்து டிசம்பர் 31 ஆம் திகதி இரவு 10.15 மணிக்கு விமானம் தரையிறங்கியது.
நியூசிலாந்திற்கும் ஹவாய் தீவிற்கும் இடையே சுமார் 23 மணி நேர இடைவெளி இருந்ததால் இந்த சம்பவம் நடந்தது.
”காலங்களுக்கு இடையேயான பயணம் இது!” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக