Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

புதன், 29 நவம்பர், 2017

உலக அழகி வெற்றியாளர்களின் வருமானம் எவ்வளவு தெரியுமா?


17 வருடத்திற்கு பின் 2017-ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டியில் இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவி மனுஷி சில்லர் கலந்து கொண்டு பட்டத்தை வென்றுள்ளார்.

இதற்கு முன்
முதன்முறையாக உலக அழகி பட்டத்தை 1966-ம் ஆண்டில் இந்திய அழகியான ரீட்டா ஃபரியா(Reita Faria) வென்றார்,

அவரைத் தொடர்ந்து 1994-ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், 1997-ம் ஆண்டு டயானா ஹைடன், 1999-ம் ஆண்டு யுக்தா முகி மற்றும் 2000-ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா ஆகியோர்கள் இந்தியாவில் உலக அழகிபட்டத்தை வென்றுள்ளனர்.

ஆனால் இந்த உலக அழகி பட்டத்தை வென்றவர்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை நீங்கள் யோசித்தது உண்டா?



உலக அழகிகளின் வருமானம் எவ்வளவு?

உலக அழகி பட்டத்தை வெல்பவர்களுக்கு உலக அழகி(Miss World) எனும் பட்டத்தை அளித்து, வைரக் கற்கள் பொருத்தப்பட்ட கீரிடத்தை சூட்டுவார்கள். இதன் மதிப்பே ரூ.2 முதல் 5 கோடி வரையிலும் இருக்கும்.

பரிசுத் தொகையாக ரூ.10 கோடி (இந்திய மதிப்பில்) வழங்கப்படும், அதுமட்டுமின்றி இலவசமாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம்.

அதோடு, சினிமா படங்கள் மற்றும் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்புகளும் குவியும். எந்த விளம்பரத்தில் நடித்தாலும் அந்த பிராண்டுகளில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களையும் இவர்கள் இலவசமாக பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக