Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

புதன், 22 நவம்பர், 2017

தலைவலியைப் போக்க இலகு வழிகள்

மன அழுத்தம், வெயிலில் சுற்றுவது, பசி, மூளையைச் சுற்றியுள்ள உறையில் நோய் தொற்று, மூளையின் ரத்தக் குழாயில் ரத்தக்கசிவு ஆகிய
வற்றினால் தலைவலி ஏற்படுகிறது. இதை உடனே போக்க அற்புதமான டிப்ஸ்கள் இதோ👇

தலைவலியை போக்க என்ன செய்ய வேண்டும்?

🔯சூடான நீரில் எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அதில் சிறிது உப்பு கலந்து குடிக்க வேண்டும்.

🔯புதினாக் கீரையின் சாற்றை நெற்றியில் தடவினால் தலைவலி பறந்து போகும்.


🔯சீரகம், 1 கிராம்பு, 2 மிளகு ஆகிய அனைத்தையும் பசும்பாலில் கலந்து அரைத்து நெற்றியில் தடவ வேண்டும்.

🔯குப்பைமேனி இலையை தூளாக்கி, அந்த பொடியை மூக்கில் இட்டு நசிய விட கடுமையான தலைவலி நீங்கும்.

🔯கிராம்பு, கறுப்பு வெற்றிலை, இஞ்சி சாற்று ஆகிய அனைத்தையும் நன்கு அரைத்து நெற்றியில் தடவலாம்.


🔯வில்வ இலையை உலர்த்திப் பொடி செய்து, அதில் ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டால் தலைவலி குணமாகும்.

🔯3 கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட தலைப்பாரம் நீங்கும்.

🔯மஞ்சள் துண்டை வேப்ப எண்ணெயில் நனைத்து நெருப்பில் சுட்டு அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் தலைவலி குணமாகும்.


🔯ஒமத்தை தூள் செய்து மெலிதான சீலையில் முடிச்சுப் போட்டு அதை அடிக்கடி நாசியில் வைத்து முகர்ந்தால், ஜலதோஷம், ஒற்றைத் தலைவலி நீங்கும்.


🔯குப்பை மேனிச் செடியை இடித்து சாறு பிழிந்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடிகட்டி ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு தேய்த்து தலை குளித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக