Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

செவ்வாய், 28 நவம்பர், 2017

நிலவும் சீரற்ற கால­நிலை தொடர்ந்தும் நீடிக்கும்; 4 மாகா­ணங்­களில் இடி­யுடன் கூடிய அதிக மழை- வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம்


இலங்­கையில் நிலவும் சீரற்ற கால­நிலை தொடர்ந்தும் நீடிக்­கு­மென வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. குறிப்­பாக மத்­திய, கிழக்கு, ஊவா மற்றும் சப்­ர­க­முவ ஆகிய மாகா­ணங்­களில் இடி­யுடன் கூடிய கன மழை பெய்யும் என
கூறப்­பட்­டுள்­ளது. இம் மாகா­ணங்­களில் அதி கூடிய மழை வீழ்ச்­சி­யாக 75 மில்லி மீற்றர் தொடக்கம் 100 வரை­யான மழை வீழ்ச்சி எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. மேற்கு, சப்­ர­க­முவ மற்றும் மத்­திய மாகா­ணங்­களில் காலை வேளை­களில் பனி மூட்டம் காணப்­படும்.
மேலும் கடலை அண்டிய பிராந்­தி­யங்­க­ளிலும் அதிக மழை பெய்யும். வட கிழக்­கி­லி­ருந்து வீசும் காற்றின் நேரடித் தாக்­க­மா­னது மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து புத்­தளம் வழி­யாக காங்­கேசன்துறை வரை­யான கடல் பிர­தே­சங்­களில் அதி­க­மாகக் காணப்­ப­டு­வ­தோடு தெற்­கி­லி­ருந்து தென் மேற்­காக வீசும் காற்றின் தாக்­க­மா­னது காலி தொடக்கம் அம்­பாந்­தோட்டை வரை­யிலும் காணப்­படும். இப் பகு­தி­களில் காற்றின் வேக­மா­னது மணித்­தி­யா­லத்­துக்கு 30 தொடக்கம் 40 கிலோ­மீற்றர் வரையில் காணப்­படும்.
காங்­கேசன் துறை­யி­லி­ருந்து புத்­தளம் வழி­யாக மன்னார் வரை­யான கடல் பிர­தே­சங்­களில் காற்றின் வேகம் சற்று அதி­க­மாகக் காணப்­படும். இப் பகு­தி­களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்.

இடி­யுடன் கூடிய மழை பெய்யும். கடல் பிர­தே­சங்­களில் காற்றின் வேக­மா­னது தற்­கா­லி­க­மாக மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை அதி­க­ரிக்­கக்­கூடும். எனவே கடற் தொழி­லா­ளர்கள் மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்ப­டு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.
கடந்த 24 மணித்­தி­யா­லங்­களில் நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் அதி­க­ள­வான மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. மின்­னே­ரியாப் பகு­தியில் 118 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­த­க்க­தாகும்.
இதே­வேளை கண்டி மாவட்­டத்தின் சோகம பகு­தியில் 115 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. பாசிக்­குடா பகு­தியில் 97.5 மி.மீ, குச்ச வெளிப் பிர­தே­சத்தில் 94 மி.மீ, அநு­ரா­த­பு­ரத்தில் 92.4 மி.மீ, அம்­பாறை புரோபஸ் குளம் பிர­தே­சத்தில் 90.2 மி.மீ, மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது.

பொத்­துவில் தீவாவி, மற்றும் பிப்பிலை ஆகிய பிரதேசங்களில் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது. அதிக மழை பெய்யும் பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும் இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக